Defence Forces- இந்திய விமானப்படையில் (IAF) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டுக்கான AFCAT 02 / 2023 தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் Flying Branch மற்றும் Ground Duty Branch பிரிவுகளில் காலியாக உள்ள குறுகிய கால ராணுவச் சேவை அதிகாரி (SSC) பணியிடங்களுக்கான பயிற்சிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த ஆன்லைன் வசதி 01.06.2023 முதல் 30.06.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://afcat.cdac.in/AFCAT/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

Indian Air Force

காலியிடங்கள்:

இந்திய விமானப் படை நடத்த உள்ள AFCAT 02 / 2023 தேர்வு மூலம் குறுகிய கால ராணுவச் சேவை அதிகாரி (SSC) பணிக்கான 276 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி:

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, BE, B.Tech, Post Graduate Degree தேர்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:
  • Flying Branch சார்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 20 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Ground Duty Branch சார்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 20 வயது முதல் 26 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:

இத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் நபர்களுக்கு பணியின் போது Pay Matrix Level – 10 என்ற ஊதிய அளவின் படி குறைந்தது ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

இந்த AFCAT 02 / 2023 தேர்வானது Online Written Exam Method மூலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்:

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த AFCAT 02 / 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 01.06.2023 அன்று முதல் 30.06.2023 அன்று வரை அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Short  Notification

Official Notification

Apply Online

Yum
Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *